குடியநல்லூர் கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது


குடியநல்லூர் கிராமத்தில்  இருதரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2021 10:52 PM IST (Updated: 25 Feb 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

குடியநல்லூர் கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே குடியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 51) என்பவர் வசித்து வரும் இடத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த காங்கமுத்து மகன்கள் கோவிந்தராசு(42), ஏழுமலை(48) தரப்பைச் சேர்ந்தவர்கள் கொட்டகை அமைத்ததாகவும், இதை தட்டிக்கேட்ட சிவகுமாரை அவர்கள் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் ஏழுமலை, கோவிந்தராசு மற்றும் முனுசாமி, கோபாலகிருஷ்ணன், அலெக்ஸ், அருள், பெரியசாமி, காசி ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜ், ஏழுமலை ஆகிய 2 பேரை கைது செய்தனர்.  

அதேபோல் ஏழுமலை மகன் ரவிசங்கர் தனக்கு சொந்தமான 9 சென்ட் நிலத்தில் கொட்டகை அமைக்க சென்றபோது அவரை 7 பேரை கொண்ட கும்பல் திட்டி தாக்கி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ரவிசங்கர் கொடுத்த புகாரின் பேரில் சிவகுமார், கொளஞ்சி, இவரது மகன்கள் குமார்(33), சின்னராசு(30), நாகராஜ்(28), ராஜீவ்காந்தி, தமிழரசன் ஆகிய 7 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னராசு, நாகராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story