வட மாநில இளைஞர் சைக்கிளில் பிரசாரம்
போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி வட மாநில இளைஞர் சைக்கிளில் பிரசாரம் செய்தார்
ராமேசுவரம்,
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி வடமாநில இளைஞர் மதாய்பால் சைக்கிள் ஓட்டிய படியே ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு சென்று தமிழகம் வந்துள்ளார். அவர் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தபடி ராமேசுவரம் வருகை தந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் ஓட்டும்போதும் வாகன ஓட்டுனர்களும் சாலை விதிமுறைகளை கடை பிடித்து ஓட்ட வேண்டும். மக்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதன் மூலமும் விபத்துகள் முழுமையாக தடுக்கப்படும். அதன்மூலம் உயிரிழப்புகளும் முழுமையாக குறைந்துவிடும். எனவே மக்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இதை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணமாக மேற்குவங்க மாநிலத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 21-ந்் தேதி சைக்கிளில் பிரசாரம் செய்து புறப்பட்டேன். ஒரு நாளைக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி பிரசாரம் செய்து வருகிறேன். 18 மாதங்கள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்று இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து மீண்டும் மேற்கு வங்க மாநிலத்தில் பிரசார பயணத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story