அரசு பஸ் மோதி முதியவர் பலி
அரசு பஸ் மோதி முதியவர் பலியானார்
கரூர்
கரூர் பஸ்நிலையம் பின்புறத்தில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று முதியவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரூர் எல்.என்.எஸ். கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் கரூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிந்து, அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story