அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 6:55 PM GMT (Updated: 25 Feb 2021 6:55 PM GMT)

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

கரூர், பிப்.26-
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பணி ஓய்வு பெறும்போது பணி கொடையாக ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் சாந்தி, பொருளாளர் கலா, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story