சமயபுரம் பாதயாத்திரை பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்


சமயபுரம் பாதயாத்திரை பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 26 Feb 2021 12:37 AM IST (Updated: 26 Feb 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் பாதயாத்திரை பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே உள்ள பாப்பையம்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் பாதயாத்திரை செல்வதற்காக கடந்த 11-ந்தேதி பாப்பையம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை பாப்பையம்பாடி மாரியம்மன் கோவிலில் தொடங்கினர். பின்னர் கோவிலில் காப்புக்கட்டு, கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பாதயாத்திரை பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பாப்பையம்பாடியில் இருந்து சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.

Next Story