மத்தன்கொட்டாய் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


மத்தன்கொட்டாய் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 26 Feb 2021 12:40 AM IST (Updated: 26 Feb 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

மத்தன்கொட்டாய் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி அருகே வெள்ளாளப்பட்டி ஊராட்சி மத்தன்கொட்டாய் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த கோவில் மகா கும்பாபிஷேக விழா கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை மற்றும் வாஸ்து பூஜைகளுடன் தொடங்கியது.

தொடர்ந்து யாகசாலை பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.  பின்னர் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சியும், கோபுர கலசம் நிறுவுதலும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலையில் இருந்து புனிதநீர் குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார சேவையும் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்  செய்து இருந்தனர்.

Next Story