நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Feb 2021 1:10 AM IST (Updated: 26 Feb 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு, கடை வாடகையை மறு நிர்ணயம் செய்யக்கோரி அதிகாரியிடம் மனு அளித்தனர்.

கடலூர், 
கடலூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் தனியார் ஓட்டலுக்கு ரூ.1½ கோடி வாடகை பாக்கி உள்ளது. இந்த வாடகையை செலுத்தாததால் அந்த ஓட்டலுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில்      நேற்று கடலூர் நகராட்சி வாடகைதாரர்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.ஜி. ராஜேந்திரன் தலைமையில் செயலாளர் சரவணன், பொருளாளர் பக்கீரான், கவுரவ தலைவர்கள் அயூப், அருணாசலம், துணை தலைவர் ஏகாம்பரம், சட்ட ஆலோசகர் சுந்தர் மற்றும் ஏ.ஜி. தஷ்ணா மற்றும் வியாபாரிகள் கடலூர் நகராட்சி ஆணையாளரை சந்திக்க திரண்டு வந்தனர். ஆனால் அவர் அறையில் இல்லை. இதனால் வியாபாரிகள் வெளியே வந்து, அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் நகராட்சி மேலாளர் வெங்கடேசனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பன்மடங்கு உயர்வு

கடலூர் நகராட்சிக்குட்பட்ட கடைகளுக்கு பன்மடங்கு வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாடகையை நகராட்சி நிர்வாகம் மறு நிர்ணயம் செய்ய வேண்டும். இது தொடர்பாக பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். ஆனால் இது வரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா காலத்தில் எவ்வித வியாபாரமும் இன்றி சிரமப்பட்டு வருகிறோம். ஆனால் நகராட்சி நிர்வாகம் உயர்த்தப்பட்ட வாடகையை உடனடியாக செலுத்துமாறு நிர்பந்தம் செய்து வருகிறது. ஆகவே இதை தவிர்க்க வேண்டும். மேலும் உயர்த்தப்பட்ட கடை வாடகையை மறு நிர்ணயம் செய்து ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இது பற்றி தலைவர் ஏ.ஜி. ராஜேந்திரன் கூறுகையில், கடந்த 2018-ம் ஆண்டு வரை மாத வாடகை ரூ.6 ஆயிரம் செலுத்தி வந்த ஓட்டலுக்கு தற்போது மாதம் ரூ.4½ லட்சம் வாடகை செலுத்த சொல்லி நகராட்சி நிர்வாகம் வற்புறுத்துகிறது. இதை எப்படி செலுத்த முடியும். ஆகவே வாடகையை ம று நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார். இந்த சம்பவத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story