தெரு நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் செத்தது


தெரு நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் செத்தது
x
தினத்தந்தி 26 Feb 2021 1:30 AM IST (Updated: 26 Feb 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

தெரு நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் செத்தது

பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே உள்ள பாண்டிமான் கோவில் தெரு குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் ஒன்று செத்தது. நேற்று அதிகாலை இதனை பார்த்த சிலர், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் வனக்காப்பாளர் வித்யா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த புள்ளிமானை மீட்டு வெங்கலமேட்டில் உள்ள வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். பின்னர், அந்த மான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

Next Story