போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 6 பேர் திருச்சிக்கு இடமாற்றம்
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 6 பேர் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 6 பேர் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
6 இன்ஸ்பெக்டர்கள்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகளின்படி இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட தஞ்சை சரகத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:-
திருச்சிக்கு மாற்றம்
தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதேபோல் திருவாரூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நீலகண்டன் ஆகியோரும் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் தஞ்சை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா, பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனிகா, தஞ்சை ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவச்செல்வன் ஆகியோரும் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story