நக்சல் தாக்குதலில் மதுரை ராணுவ வீரர் பலி
மதுரை அருகே உள்ள பொய்கைகரைப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானார். அவரது உடல் இன்று சொந்த ஊருக்கு ெகாண்டு வரப்படுகிறது.
புதூர்,பிப்.
மதுரை அருகே உள்ள பொய்கைகரைப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானார். அவரது உடல் இன்று சொந்த ஊருக்கு ெகாண்டு வரப்படுகிறது.
ராணுவ வீரர்
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கள்ளந்திரி ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி லட்சுமணன். இவரது 3-வது மகன் பால்சாமி (வயது 33) கடந்த 2008-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.
அதன் பின்னர் இந்தோ திபெத் எல்லை காவல் படையில் நக்சல் தடுப்பு படையில் 14 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.
இவர் சத்தீஸ்கர் மாநிலம், நாரயன்பூர் மாவட்டம், சோன்பூர் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போது நக்சல் தீவிரவாதிகள் தாக்குதலில் சிக்கி பலியானார்.
மனைவி- குழந்தை
இது குறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இவருக்கு திருமணமாகி ராமலட்சுமி (வயது 26) என்ற மனைவியும், 2 வயது குழந்தையும் உள்ளனர்.
லட்சுமணனின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது. பொய்கைகரைப்பட்டியில் ராணுவ மரியாதை செய்யப்பட்டு இன்று காலை 8 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து ராணுவ வீரர் பால்சாமியின் அண்ணன் பாஸ்கரன் கூறியதாவது:-
எனது தம்பி மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தால் ஓய்வு எடுக்காமல் உள்ளூர் இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டுவார். ராணுவ பணிகள் பற்றி எடுத்துரைப்பார். இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்று எடுத்துக் கூறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story