ஆவின் பணி நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
ஆவின் பணி நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மதுரை,பிப்
மதுரையை சேர்ந்த கணேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை ஆவினில் சுமார் 62 காலிப்பணியிடங்களை நிரப்பியதில் விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லை. இங்கு பல்வேறு ஊழல்கள் நடக்கின்றன. இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலன் இல்லை. எனவே மதுரை ஆவினில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முறையாக அறிவிப்பு வெளியிட்டு, விதிமுறைகளை பின்பற்றி தகுதியானவர்களை அந்தந்த பணிகளில் அமர்த்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, விதிமுறைகளை பின்பற்றி அறிவிப்பு வெளியிட்டு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் தற்போது பணியில் சேர்ந்துள்ளனர் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளை மனுதாரர் மிரட்டி பணம் பெறும் நோக்கில் செயல்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, அந்த புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், பணி நியமன ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்துவிட்டனர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story