சுரண்டையில் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்


சுரண்டையில் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 26 Feb 2021 2:14 AM IST (Updated: 26 Feb 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

சுரண்டை:

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சுரண்டையில் நகர அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நகர செயலாளர் வி.கே.எஸ்.சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர்கள் இருளப்பன், அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலிங்கம் வரவேற்று பேசினார்.

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 3 ஆயிரம் பேருக்கு‌ நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார்கள் மகமை கமிட்டி திருமண மண்டபம் முன்பிருந்து ஏராளமானவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அழகுபார்வதி அம்மன் கோவில் முன்பு சென்றடைந்தனர். அண்ணா சிலைக்கும், ஜெயலலிதா உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் 176 பேருக்கு ரூ.51 லட்சத்து 99 ஆயிரத்து 503 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story