வால்பாறை: தொழிலாளர்கள் வீடுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
வால்பாறையில் தொழிலாளர்கள் வீடுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
வால்பாறை,
வால்பாறை வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கல்லார், தாய்முடி பகுதிகளில் 3 குட்டிகளுடன் 11 காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டன.
இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற 4 காட்டு யானைகள் தாய்முடி என்சி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கு செல்வகுமார், கோட்டத்துறை, பாப்பாள், ரெஜினா ஆகியோரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தின.
இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர் சத்தம் போட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காட்டு யானைகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story