ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடராஜர் சன்னதியில் புதிய கொடி மரம்


ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடராஜர் சன்னதியில் புதிய கொடி மரம்
x
தினத்தந்தி 26 Feb 2021 2:49 AM IST (Updated: 26 Feb 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடராஜர் சன்னதியில் புதிய கொடி மரம் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு கோட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆரூத்ரா கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் ஸ்ரீ நடராஜர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியின் முன்புறம் 19 அடி உயர கொடி மரம் இருந்தது. இந்த கொடி மரம் மிகவும் பழுதான நிலையில் இருந்ததால் இதனை அகற்றிவிட்டு புதிய கொடி மரம் வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ரீ நடராஜர் சன்னதி முன்புறம் இருந்த கொடிமரத்திற்கு பாலாயம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் இருந்த செப்பு தகடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, நேற்று கொடி மரம் அகற்றும் பணி நடந்தது. இந்த பணி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் அன்னக்கொடி, மண்டல நகை மதிப்பீட்டாளர் ராஜேஷ்வர், மண்டல ஸ்தபதி ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் ஹரி, தினேஷ்குமார், செயல் அலுவலர் அருள்குமார், ரமணிகாந்தன், கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.  இதில் அருள் நெறி திருக்கூட்ட தலைவர் மாசிலாமணி, செயலாளர் பெரியசாமி, கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ நடராஜர் சன்னதி முன்பு புதிதாக தேக்கு மரத்தால் ஆன 19 அடி உயரம் கொண்ட கொடி மரம் மீண்டும் வைக்கப்பட உள்ளது. அதற்காக செப்பு தகடுகள் மேல் தங்கமூலாம் பூசும் பணி நடந்து வருகிறது. விரைவில் புதிய கொடி மரம் வைக்கப்பட உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story