தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள முடியாமல் புள்ளம்பாடி பொதுமக்கள் அவதி


தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள முடியாமல் புள்ளம்பாடி பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 26 Feb 2021 3:35 AM IST (Updated: 26 Feb 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள முடியாமல் புள்ளம்பாடி பொதுமக்கள் அவதி

கல்லக்குடி, 
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக கடந்த 1989-ம் ஆண்டு புள்ளம்பாடியில் தீயணைப்பு நிலையம் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் இந்த தீயணைப்பு நிலையத்தின் தொலைபேசி எண் சரிவர வேலை செய்யவில்லை. சுற்று வட்டார கிராமங்களில் தீவிபத்து ஏற்படும்போது நேரில் வந்தோ அல்லது புள்ளம்பாடி பகுதியில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் மூலமோ தகவல் கொடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து சேர பல மணி நேரம் ஆகி விடுகிறது. இதனால் தீ விபத்தில் பாதிக்கப்படும் பகுதி மக்கள் பெரும் பொருட் சேதம் மற்றும் வீடுகள் முற்றிலும் எரிந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே இதற்கு உரிய தீர்வு காண அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story