திருவானைக்காவல் கோவிலில் முருகன் சிலை மாயமானதாக பரபரப்பு


திருவானைக்காவல் கோவிலில் முருகன் சிலை மாயமானதாக பரபரப்பு
x
தினத்தந்தி 26 Feb 2021 3:35 AM IST (Updated: 26 Feb 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

திருவானைக்காவல் கோவிலில் முருகன் சிலை மாயமானதாக பரபரப்பு ஏற்பட்டது.

திருவானைக்காவல் கோவிலில்
முருகன் சிலை மாயமானதாக பரபரப்பு
ஸ்ரீரங்கம், பிப்.26-
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் வளாகத்தில் உள்ள மல்லப கோபுரத்தின் வலது புறம் பிள்ளையார் சன்னதியும், இடது புறம் வள்ளி-தெய்வானையுடன் கூடியமுருகன் சன்னதியும் உள்ளது. இந்நிலையில் முருகன் சன்னதியில் இருந்த சிலையை காணவில்லை என்று சமூக வலைதளங்களில் முருகன் சிலை இல்லாமல் புகைப்படம் பரவியது. இது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் மாரியப்பனிடம் கேட்டபோது, ‘இங்குள்ள முருகன் சன்னதியில் சுவரோடு கூடிய புடைப்பு சிற்பமாக வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் இருக்கின்றார். கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் பக்தர்களுக்கு இது நன்றாக தெரியும். சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படத்தில் புடைப்பு சிற்பத்தின் கீழே உள்ள பூஜை பொருட்கள் வைக்கும் சிமெண்டு மேடையை சிலை இருந்த பீடம் என சிலர் தவறாக பதிவிட்டுள்ளனர். இதனால் சிலை மாயமானதாக செய்தி பரவிவிட்டது. சிலை மாயமானதாக கூறப்பட்டது முற்றிலும் வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம்’ என்றார்.

Next Story