சேலத்தில் 3-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 45 பேர் கைது
சேலத்தில் 3-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் நலச்சங்கம் சார்பில் மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், நேற்று 3-வது நாளாக தடையை மீறி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் ரத்தினம் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழக அரசு துறைகளில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக கூறி மாற்றுத்திறனாளிகள் 45 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கோட்டை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story