வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு
வக்கீல்கள் இன்று கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர்:
காவல்துறையில் பணிபுரியும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், தனக்கு தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்துள்ளார். சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாசின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன், அவர் மீது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கொடுத்துள்ள புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நேர்மையான புலனாய்வு செய்ய வலியுறுத்தியும், பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்தவும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பெரம்பலூர் வக்கீல் சங்கத்தினை (பார் அசோசியேஷன்) சேர்ந்த வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணிப்பது என்று அச்சங்கத்தின் அவசர செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story