9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மாணவர்கள், ஆசிரியர்கள் மீது அரசுக்கு அக்கறையில்லை - ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பேட்டி
9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் மீது அக்கறையில்லாமல் அரசு செயல்பட்டுள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் செங்கல்பட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை,
தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தும், அந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு இந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், நிச்சயம் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்கும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்துள்ள அரசு, மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா? வேண்டாமா?, ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
தேர்தலை முன்வைத்தே இந்த அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தியுள்ளனர். ஆசிரியர்களின் உழைப்பு வீணாகியுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் மீது அக்கறையில்லாமல் அரசு செயல்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story