10- ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்


10- ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Feb 2021 11:05 AM IST (Updated: 26 Feb 2021 11:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வடபழனி அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தினர்.

பூந்தமல்லி, 

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், சூளைமேட்டை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், அவரது உறவுக்கார வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.

முன்னதாக இவர்களின் திருமண வரவேற்பு நேற்று முன்தினம் நடைபெறுவதாக குழந்தைகள் நலச்சங்க உதவி மையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் அபிராமி மற்றும் ஊழியர்கள், வடபழனி அனைத்து மகளிர் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

இதனால் மணமக்களை வாழ்த்த வந்த இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், அந்த சிறுமி, சூளைமேட்டில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. மாணவியை மீட்ட போலீசார், அவரை செனாய் நகரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் இதுபற்றி மாணவியின் பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story