விளைநிலங்களில் சேலைகள் கட்டும் பணி
பெரும்பாறை பகுதியில் காட்டெருமைகள் புகுவதை தடுக்க விளைநிலங்களில் சேலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பெரும்பாறை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்சலூர், பன்றிமலை, சோலைக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காபி பிரதான பயிராக உள்ளது.
காபிக்கு ஊடுபயிராக மிளகு, வாழை, ஆரஞ்சு, எலுமிச்சை, அவகோடா, ஏலக்காய், சவ்சவ், அவரை, பீன்ஸ் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு காட்டெருமைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அவைகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் தோட்டங்களில் முள்வேலிகள் அமைத்து அவற்றின் மீது சேலைகளை கட்டி வருகின்றனர்.
இந்த சேலைகள் பல நிறங்களில் கட்டி வைப்பதால், காட்டெருமைகள் வருவதை தடுக்க முடியும் என்று அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் காட்டெருமைகள் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story