வருவாய் உதவியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
வருவாய் உதவியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்.
ஊட்டி
இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வுக்கான பணி மூப்பு காலங்களை 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டாக குறைக்க வேண்டும்,
உதவியாளர்கள் ஓய்வு பெறும்போது கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். போராட்டம் காலை முதல் மாலை வரை நடந்தது.
நீலகிரியில் வருவாய் உதவியாளர்கள் 85 பேர் உள்ளனர். அவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வரிவசூல், சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story