பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி 9-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி 9-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 9:25 PM IST (Updated: 26 Feb 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 9-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 9-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கிரு‌‌ஷ்ணன் தலைமை தாங்கினார். கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட கலெக்டருக்கு அதிகாரம் வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் முன்னாள் மாவட்ட இணைச்செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

Next Story