பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில், மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் மரகதவள்ளி தலைமை தாங்கினார். நகர மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஜானகி, மீரா, வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம், முன்னாள் நகர தலைவர் செல்வம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில துணைத் தலைவர் கனகசபை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் கமலநாதன், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story