ஊராட்சிகளில் அடிப்படை வசதி செய்துதரக்கோரி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஊராட்சிகளில் அடிப்படை வசதி செய்துதரக்கோரி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட ரிஷிவந்தியம், பாசார், முனிவாழை, பிரிவிடையாம்பட்டு, மண்டகப்பாடி, முட்டியம், வெங்கலம் ஆகிய ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத அ.தி.மு.க அரசை கண்டித்து ரிஷிவந்தியம் ஊராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்ம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். அப்போது தேர்தலுக்கு முன்பாக பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மேற்கண்ட கிராம மக்களை ஒன்று திரட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார். இதில் ஒன்றிய செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அமிர்தவள்ளி கே எவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், சார்புஅணி நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story