திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம்
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம்
திருப்பூர், பிப்.27-
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தொடங்கியது. வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சித்ரா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட வருவாய் கிராம ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். பின்னர் மாலையில் உண்ணாவிரதம் நிறைவடைந்தது.
Related Tags :
Next Story