கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்


கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 26 Feb 2021 11:23 PM IST (Updated: 26 Feb 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்

மதுரை, 
மதுரை அண்ணாநகர் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அண்ணாநகர் உழவர்சந்தை பகுதியில் போலீசார் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அதில் செல்லூர் தத்தனேரியை சேர்ந்த விக்னேஷ்வரன்(வயது 24), வினித்(19) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்துபோது அதில் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன், மோட்டார் சைக்கிள், 11,500 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story