முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்


முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 27 Feb 2021 12:44 AM IST (Updated: 27 Feb 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

முனியப்பன் கோவில் உள்ளது.

வேலாயுதம்பாளையம்
மண்மங்கலம் வட்டாரக்காட்டில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவசாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story