வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறையில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி வழங்கப்பட வேண்டும். பதவி உயர்விற்கு இப்பயிற்சிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்திரவாதம் செய்து, உடன் தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10-வது நாளாக நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயவேல் காந்தன் தலைமை தாங்கினார். இதில் மத்திய செயற்குழு உறுப்பினர் சந்துரு, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்.ஜெயராம் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story