முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2021 1:23 AM IST (Updated: 27 Feb 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:
தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணபதி தலைமை தாங்கினார். முடி திருத்தும் தொழிலாளர் சமூக மக்களுக்கு 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தனி சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முடி திருத்தும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தையொட்டி கடைகளை அடைத்திருந்தனர்.
குளத்தூர் தாலுகா அளவில் 250 சலூன் கடைகளை அடைத்து புதுக்கோட்டையில் நடந்த உண்ணாவிரதத்தில் 300 பேர் கலந்து கொண்டனர். வழக்கம்போல சலூன் கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் கடைகள் மூடப்பட்டு இருப்பது அறிந்து திரும்பிச் சென்றனர்.

Next Story