கரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக வழக்கம்போல் பஸ்கள் ஓடின
கரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக வழக்கம்போல் பஸ்கள் ஓடின.
கரூர்
ஆர்ப்பாட்டம்
2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை அதை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வு நவம்பர் 2015 முதல் வழங்கப்படவில்லை, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் 18 மாதங்களாக போடப்படவில்லை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எல்.பி.எப். கிளைச் செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். இதில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ,, ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்
கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் நேற்று 2-வது நாளாக வழக்கம்போல் இயக்கப்பட்டன. இதில் பயணிகள் பயணம் செய்தனர்.
Related Tags :
Next Story