தேரோட்டத்தில் மூதாட்டி சங்கிலி மாயம்
தேரோட்டத்தில் மூதாட்டி சங்கிலி மாயம்
குளித்தலை
குளித்தலை சாமூண்டீஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வையாபுரி என்பவரது மனைவி தனலெட்சுமி (வயது 62). இவர் நேற்று கடம்பவனேசுவரர் கோவில் தேர் திருவிழாவிற்கு சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார். கூட்ட நெரிசலில் அவர் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க தாலி சங்கிலி காணாமல் போயியுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் தனது தங்க தாலி சங்கிலி காணாமல் போனது குறித்து அவரது கனவர் வையாபுரிக்கு தகவல் அளித்தார். இதுகுறித்து தகவலறிந்த அங்கு பணியில் இருந்த குளித்தலை போலீசார் அவரை குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். மேலும் அவரது தங்கதாலி சங்கிலி அருந்து கீழே விழுந்துவிட்டதா அல்லது யாரேனும் அவரது சங்கிலியை திருடிச்சென்றார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story