கரூரில் அம்மா சாலை திறப்பு


கரூரில் அம்மா சாலை திறப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 1:37 AM IST (Updated: 27 Feb 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் அம்மா சாலை திறக்கப்பட்டது.

கரூர்
கரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் ரூ.21.12 கோடியில் அம்மா சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் கரூரில் செங்குந்தபுரம், காமராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், மகாத்மா காந்தி சாலை, வையாபுரிநகர், கோவை ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையவும், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து கரூர் நகரில் ஜவுளி நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய எளிதாக சென்றுவரும் வகையிலும் இந்த சாலை அமைக்ப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அம்மா சாலை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி, அம்மா சாலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கரூர் நகராட்சி ஆணையர் சுதா, அ.தி.மு.க. வடக்கு நகர செயலாளர் பாண்டியன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கரூர் காந்திகிராமத்தில் உள்ள நடைமேடையுடன் கூடிய புனரமைக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கலெக்டர் திறந்து வைத்தார். வெண்ணைமலையில் உள்ள முருகன் கோவிலை சுற்றி வடிகால் வசதியுடன் கூடிய தார்சாலை மற்றும் விளையாட்டு பூங்காவையும் கலெக்டர் திறந்து வைத்தார்.

Next Story