தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் 14 அம்ச ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தின்போது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், தனியார் ஒப்பந்த பணியாளர்களை பயன்படுத்தி பஸ்களை இயக்கக்கூடாது எனவும், பேச்சுவார்த்தைக்கு அழைக்காத தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story