போகனப்பள்ளி, கொங்கன்செருவு கிராமங்களில் எருது விடும் விழா 10 பேர் காயம்
போகனப்பள்ளி, கொங்கன்செருவு கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த போகனப்பள்ளி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. விழாவையொட்டி சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காளைகள் ஒவ்வொன்றாக ஓட விடப்பட்டன.
குறிப்பிட்ட தூரத்தை முதலில் கடந்து வரும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவை காண கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் மாடுகள் முட்டி 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல பர்கூர் ஒன்றியம் கொங்கன்செருவு கிராமத்தில் எருது விடும் விழா நடந்தது. இதையொட்டி பர்கூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக ஓட விடப்பட்டன. குறிப்பிட்ட தூரத்தை முதலில் கடந்து வந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், பர்கூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story