அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திருச்சியில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்


அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திருச்சியில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 27 Feb 2021 3:31 AM IST (Updated: 27 Feb 2021 3:31 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 2-வது நாளாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினார்கள். 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி, 

திருச்சியில் 2-வது நாளாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினார்கள். 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டம்

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி. உள்பட 14 தொழிற்சங்கங்கள் பங்கு பெற்று உள்ளன. முதல் நாளான நேற்று முன்தினம் திருச்சி மாவட்டத்தில் 70 சதவீதஅரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தங்களது வெளியூர் பயணத்திற்கு தனியர் பஸ்களை மட்டுமே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டாவது நாளாக...

இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று திருச்சியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பெரும்பாலான அரசு பஸ்கள் பணிமனைகளிலேயே முடங்கி கிடந்தன.

அரசு பஸ்கள் ஓடாததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறிப்பாக பெண் ஊழியர்கள் பஸ்கள் ஓடாததால் கார் மற்றும் ஆட்டோக்களிலும், இருசக்கர வாகனனங்களிலும் பயணித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் புறநகர் கிளை அலுவலகம் முன் கூடி நின்றனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மத்திய சங்க செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். 
60 சதவீதம் பஸ்கள் இயக்கம்

திருச்சி மண்டலத்தில் நேற்று 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அந்தந்த கிளை மேலாளர்கள் தேவைக்கு தகுந்தாற்போல் தற்காலிகமாக தொழிலாளர்களை வேலைக்கு எடுத்து பஸ்களை இயக்கி வருகிறார்கள் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story