துறையூரில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
துறையூரில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
துறையூர்,
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து துறையூரில் உள்ள அனைத்து லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் வேன் ஓட்டுனர் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு லாரி உரிமையாளர் சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வேன் ஓட்டுனர் சங்கத்தின் தலைவர் சிவானந்தம் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறையூரில் உள்ள அண்ணா சிலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து பின்பு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் துறையூர் காவல் நிலையம் வழியாக தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தாசில்தார் செல்வத்திடம் மனு அளித்தார்கள்.
Related Tags :
Next Story