ரேஷன் கார்டு இல்லாததால் உதவித்தொகை பெறமுடியாமல் தவிக்கும் மூதாட்டி

ரேஷன் கார்டு இல்லாததால் உதவித்தொகை பெறமுடியாமல் தவிக்கும் மூதாட்டி
x
தினத்தந்தி 27 Feb 2021 3:32 AM IST (Updated: 27 Feb 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கார்டு இல்லாததால் உதவித்தொகை பெறமுடியாமல் தவிக்கும் மூதாட்டி

உப்பிலியபுரம், 
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரம் பகுதியை சேர்ந்த ராமனின் மனைவி பொன்னம்மாள் (வயது 71). இவரது குழந்தைகள் இறந்து விட்டனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பண்ணையில் வேலைசெய்தபோது மாடு முட்டியதில் ராமன் இறந்துவிட்டார். வயது முதிர்வினால் பொன்னம்மாள் வேலைக்கு செல்ல முடியாமல் பயணிகள் நிழற்குடையில் தங்கி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உணவு உண்டு வாழ்ந்து வருகிறார். இவருக்கு ரேஷன்கார்டு இல்லை. இதனால் உதவித்தொகை பெறமுடியாமல் தவித்து வருகிறார். எனவே தனக்கு முதியோர் உதவிக்தொகை பெற ரேஷன் கார்டு வழங்கும்படி கலெக்டா் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

Next Story