பாவூர்சத்திரம் அருகே பெண்ணின் கண்ணில் மசாலா பொடி தூவி நகை பறிப்பு


பாவூர்சத்திரம் அருகே பெண்ணின் கண்ணில் மசாலா பொடி தூவி நகை பறிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 6:06 AM IST (Updated: 27 Feb 2021 6:06 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே பெண்ணின் கண்ணில் மசாலா பொடி தூவி நகையை மர்மநபர் பறித்து சென்றார்.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவருடைய மனைவி செல்லத்தாய் (வயது 31). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு மல்லிகை, கேந்தி உள்ளிட்ட பூக்களை பயிரிட்டுள்ளனர். நேற்று காலையில் செல்லத்தாய் தனது தோட்டத்தில் பூக்களை பறிப்பதற்காக சென்றார். அப்போது தோட்டத்தின் அருகில் பதுங்கி இருந்த மர்மநபர் திடீரென்று அவரது முகத்தில் மசாலா பொடியை தூவினார்.

இதனால் அவர் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால் நிலைகுலைந்து அலறினார். அப்போது அந்த மர்மநபர், செல்லத்தாயின் கழுத்தில் அணிந்து இருந்த 4¼ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story