புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு
புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுசேரியில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்தன.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வழக்கமாக சில்லரை விற்பனை மதுபான கடைகள், சாராயக்கடைகள் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். தேர்தல் காரணமாக, சில்லரை, மொத்த விற்பனை கடைகள், சுற்றுலா பிரிவு மதுபான கடைகள், சாராயக்கடைகள் அனைத்தும், விற்பனை முடிக்கும் நேரம் இரவு 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுபான கடையை தவிர்த்து, வேறு எந்த இடத்திலும் மதுபானங்களை வைத்திருக்க கூடாது, மதுபான குடோன்களில் மதுபான கடைகளுக்கு காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுபானங்களை கொண்டு செல்ல வேண்டும் என கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story