கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு


கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 7:56 PM IST (Updated: 27 Feb 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது

கீழக்கரை, 
கீழக்கரையில் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ்  கலங்கரை விளக்கம் கடந்த 1979-ல் செயல்பட தொடங்கியது.  15 நொடிக்கு ஒரு முறை வெளிச்சத்தை உமிழும் சிறப்பு கொண்டது. இந்த கலங்கரை விளக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பு காண்பதற்கு கட்டணம் பெற்று அனுமதி அளித்து வந்தனர். பின்பு 1991 முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில்அரசு துறையின் உரிய ஒப்புதல் அளிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்பு இந்தபகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு கலங்கரை விளக்கத்தை ரூ.10 வசூலிக்கப்பட்டு காண்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 
கலங்கரை விளக்க கடல் பயண முதல் நிலை உதவியாளர் வசந்த் முன்னிலையில் கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

Next Story