குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2021 10:36 PM IST (Updated: 27 Feb 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை, 
மதுரை காமராஜபுரம், என்.எம்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ராஜா(வயது 21). மேலஅனுப்பானடி நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலையப்பன் மகன் அழகுராஜா(25). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜா, அழகுராஜா ஆகியோரை கைது செய்தனர்.

Next Story