சங்கராபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


சங்கராபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2021 11:08 PM IST (Updated: 27 Feb 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ருத்திரன்(வயது 24). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் இருந்த ருத்திரனை அவரது தாய் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் தாயிடம் கோபித்து கொண்டு அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற ருத்திரன் அங்கு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story