கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பணி அனுபவம் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி, பிப்:
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவர்கள் தீபக், தீபன், ஜானகி பிரசாத், தருண் பாலாஜி, தினேஷ் குமார், தேவராஜ், தரணி பிரியன், ஹரிஷ் ஆகியோர் கிராமப்புற பணி அனுபவத்திற்காக, கோவில்பட்டி வருவாய் கிராமங்களில் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் பெய்த கடும் மழையினால் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் விவசாயம் பாதிப்படைந்தது. இதற்காக பயிர் அறுவடை பரிசோதனை மூலம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டின் மூலம் காப்பீடு பெறப்படுகின்றன.
கிராம தங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக கங்கன்குளத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் அங்குள்ள விவசாயி அன்ன ராஜ், வயலில் நெற்பயிர் அறுவடை பரிசோதனை நடத்தினார்கள். கோவில்பட்டி வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் நாகராஜன் தலைமையில் பயிர் அறுவடை பரிசோதனை ஊழியர்கள் அழகு லட்சுமி, தன லட்சுமி, பேராசிரியர் ாமோதரன் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
Related Tags :
Next Story