சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

சங்கராபுரம் அருகே  மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 27 Feb 2021 11:54 PM IST (Updated: 27 Feb 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள சின்னகொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் விஷ்ணு (27). இவர் மோட்டார் சைக்கிளில் தேவபாண்டலத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தார். மூக்கனூர் பிரிவு சாலை அருகே வந்தபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story