அன்னவாசல் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு; பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் அவதி


அன்னவாசல் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு; பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 28 Feb 2021 12:14 AM IST (Updated: 28 Feb 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

கடும் பனிப்பொழிவு; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

அன்னவாசல்:
அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு நீடித்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் சாலைகளில் மெதுவாக ஊர்ந்து சென்றது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் வாகனங்கள் பகலில் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. நேற்று காலை 9 மணி வரை இலுப்பூர் அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், நார்த்தாமலை, பரம்பூர், வயலோகம் பகுதிகளில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் சாலைகள் அனைத்தும் பனி மூட்டத்தில் மூடியிருந்தது. மேலும் சித்தன்னவாசல், நார்த்தாமலை, குடுமியான்மலை போன்ற மலை பகுதிகள் பனிப் பொழிவால் மலைகள், வானத்துடன் ஒட்டி இருப்பது போல் காட்சியளித்தது.

Next Story