தேர்தல் நடத்தை விதி அமலில் வந்ததால் மதுரை மாவட்டத்தில் எம்.எல்.ஏ. அலுவலகங்ளுக்கு பூட்டு


தேர்தல் நடத்தை விதி அமலில் வந்ததால் மதுரை மாவட்டத்தில் எம்.எல்.ஏ. அலுவலகங்ளுக்கு பூட்டு
x
தினத்தந்தி 28 Feb 2021 1:43 AM IST (Updated: 28 Feb 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதி அமலில் வந்ததால் மதுரை மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்ளுக்கு பூட்டு போடப்பட்டது

வாடிப்பட்டி
தேர்தல் நடத்தை விதி அமலில் வந்ததால் மதுரை மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்ளுக்கு பூட்டு போடப்பட்டது.
தேர்தல் நடத்தை விதி
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வாக்குபதிவு நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் நேற்றுமுன்தினம் அறிவித்தது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதனால் மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தி வந்த அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க வருவாய்துறை அதிகாரிகள் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி கால்நடைமருத்துவமனை முன்பு சோழவந்தான் எம்.எல்.ஏ. அலுவலகத்தை நேற்று வருவாய் ஆய்வாளர் சஞ்ஜிவிநாதன், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன், கிராம உதவியாளர் சண்முகவேலு ஆகியோர் பூட்டி சீல் வைத்தனர்.
திருப்பரங்குன்றம்
இதேபோல் திருமங்கலம்-உசிலம்பட்டி ரோட்டில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டப்பட்டது. மேலும் திருமங்கலத்தில் உள்ள அனைத்து கட்அவுட், பேனர்கள் அகற்றப்பட்டன. 
மேலும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டப்பட்டது. திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிக்கப்பட்டு அரசு சுவர்களில் வரையப்பட்டிருந்த கட்சி சின்னங்களை வருவாய்த்துறையினர் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story