குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி பாதிக்கும் அபாயம்
குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம்
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். பருவமழை காரணமாக தொடர்ந்து முழு கொள்ளளவில் ஏரி காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி 41.27 அடியாக நீர்மட்டம் உள்ளது. மேலும் சென்னைக்கு வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு மூலம் வினாடிக்கு 96 கனஅடி தண்ணீரும், வீராணம் ஏரி பாசனத்திற்கு வினாடிக்கு 39 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது. ஏரிக்கு நீர்வரத்து என்பது இல்லை.
இந்த நிலையில் ஏரியில் 39 அடி வரைக்கும் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்க முடியும். இதே நிலை நீடித்தால் எதிர்வரும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி அனுப்ப முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இன்னும் 2 மாதங்களுக்கு சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story