அந்தியூர் அருகே மூச்சுத்திணறி 7 மாத கர்ப்பிணி சாவு- போலீசார் விசாரணை
அந்தியூர் அருகே மூச்சுத்திணறி 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.
அந்தியூர்
அந்தியூர் அருகே மூச்சுத்திணறி 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.
கர்ப்பிணி
கர்நாடக மாநிலம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 35). இவருக்கும், சுமதி (29) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சுமதி கணவருடன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் சுமதி கர்ப்பம் ஆனார். 7 மாத கர்ப்பிணியான சுமதிக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சாவு
உடனே வீட்டில் இருந்த முத்துசாமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமதியை சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சுமதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் அங்கு சென்று, சுமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story