ஜே.பி.நட்டா 10-ந்தேதி தஞ்சை வருகை


ஜே.பி.நட்டா 10-ந்தேதி தஞ்சை வருகை
x
தினத்தந்தி 27 Feb 2021 9:33 PM GMT (Updated: 27 Feb 2021 9:33 PM GMT)

பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 10-ந்தேதி தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இது தொடர்பாக 6 மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தஞ்சையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்;
பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 10-ந்தேதி தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இது தொடர்பாக 6 மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தஞ்சையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆலோசனை கூட்டம் 
தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர் ஆகிய 6 மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கருப்புமுருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் பண்ணைவயல் இளங்கோ, சதீ‌‌ஷ்குமார், நேதாஜி, வெங்கடே‌‌ஷ், அய்யாரப்பன், ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ஜ.க. மாநில பொது செயலாளர் ராம.சீனிவாசன், செயலாளர் தங்க.வரதராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
ஜே.பி.நட்டா வருகை 
கூட்டத்தில் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) தஞ்சை வருகிறார். தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் பேசுகையில், ‘‘இந்த தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும். நமக்கு தொகுதி எண்ணிக்கை முக்கியம் அல்ல. எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்பது தான் முக்கியம். வெற்றி தான் நமக்கு மரியாதையை தரும். வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.2006-க்கு பிறகு தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ. இல்லை. எனவே இந்த தேர்தலில் நாம் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும். ஜே.பி.நட்டா பங்கேற்கும் கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்’’என்றார்.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் அண்ணாமலை, பேட்டைசிவா, வக்கீல் பிரிவு மாநில இணை செயலாளர் ராஜேஸ்வரன், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவர் பாண்டிதுரை, மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜெய்சதீ‌‌ஷ், பூண்டிவெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story